நாடு முழுவதும் ஏப்.1 முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்வது கட்டாயம்: மத்திய அரசு

எத்தனால் உற்பத்திக்காக கரும்பு மற்றும் சோளம் பயன்படுத்துவதால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.
நாடு முழுவதும் ஏப்.1 முதல்  20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்வது கட்டாயம்: மத்திய அரசு
Published on

டெல்லி,

நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. இது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் அன்னியச் செலாவணியைச் சேமித்தல், உமிழ்வைக் குறைத்தல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-2025க்கு இடையில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் E20 பெட்ரோலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும், பழைய வாகனங்களின் மைலேஜில் சிறிது குறைவு ஏற்படலாம் எனவும் ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் தேய்ந்து போகலாம் எனவும் வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com