

புது டெல்லி,
லண்டன் பல்கலைக்கழகங்களில் உரையாற்ற செல்லவிருந்த தன்னை, டெல்லி விமான நிலையத்தில் மத்திய பாஜக அரசு தடுத்து நிறுத்திவிட்டதாக காக்ரோச் ஜனதா கட்சி நிர்வாகி சவுரவ் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் உள்ளிட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பேசுவதற்காக லண்டன் செல்லவிருந்த நிலையில், குடியேற்ற பிரிவு (Immigration) அதிகாரிகள் தன்னை தடுத்து நிறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம் என அவர் சாடியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, சவுரவ் தாஸின் பாஸ்போர்ட்டில் அவரது பிறந்த ஊர் சென்னை என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதே இந்த நடவடிக்கைக்கு காரணம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு பதிலளிக்கும் வரை அந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.