

புதுடெல்லி,
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு அரசு பணிகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும், குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்பை முழுவதுமாக தளர்த்தக்கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மனுதாரர் ரமேஷ் சார்பில் வக்கீல் ஜெயசுகின் தாக்கல் செய்திருந்த இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தனர்.