

புதுச்சேரி,
புதுச்சேரியில் நவம்பர் 8ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளியில் மத்திய உணவு வழங்கப்படாது. நகர் பகுதிகளில் 9 மணி முதல் 1 மணி வரையும், கிராமப்புறங்களில் 9:30 முதல் 1 மணி வரையிலும் பள்ளிகள் செயல்படும். மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது. சுயவிருப்பத்தின் பேரில் மாணவர்களை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்பலாம். அதேபோல 1 முதல் 8ஆம் வகுப்புக்கு ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.