செமிகான் இந்தியா மாநாடு 2026; மற்றொரு மைல்கல் - பிரதமர் மோடி

இந்தியா தனது செமி கண்டக்டர் (குறைக்கடத்தி) திட்டத்தின் 2-ம் கட்டத்தைத் தொடங்கி உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

செமிகான் இந்தியா மாநாடு 2026
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

செமிகண்டக்டர் உற்பத்திக்கு விருப்பமான இடமாக மாறுவதற்கு இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இன்று டெல்லியில் உள்ள யஷோ பூமி மாதாட்டு மையத்தில் செமிகான் இந்தியா 2026 தொடங்கி வைத்தார். இன்று 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாடு மற்றும் கண்காட்சியில் செமிகண்டகடர், மின்னணு துறையைச் சேர்ந்த உலக னாவிய இந்திய நிறுவ னங்கள், கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்ற இளைஞர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். பின்னர் அவர் மாநாட்டில் பேசியதாவது:-

சமீபத்தில் இந்தியாவின் காலாண்டு மொத்த உள்நாட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சவாலான காலகட்டத்திலும், இந்தியா 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்தை அடைந்து நிரூபித்துள்ளது.

செமிகான் இந்தியா மாநாடு

இந்தியா பிரிக்ஸ் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. அனைவரின் ஆதரவுடன் புதுடெல்லி பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இந்தியாவின் உலகளாவிய நம்பகத்தன்மைக்கு மேலும் ஒரு சான்றாகும்.

இத்தகைய முக்கிய சாதனைகளுக்கு மத்தியில் செமிகான் இந்தியா மாநாடு நடைபெறுவது மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

இந்தியா தனது செமி கண்டக்டர் (குறைக்கடத்தி) திட்டத்தின் 2-ம் கட்டத்தைத் தொடங்கி உள்ளது. முதல் கட்டத்தின் மதிப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், 2-ம் கட்டத்திற்கு 13.5 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் குறைக்கடத்திச் சூழலமைப்பு விரிவடைந்து, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது.

செமிகண்டக்டர் உற்பத்தி

இதுவரை 12 சிப் தயாரிப்புத் திட்டங்களுக்கு. ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். சிப் உற்பத்திக்கு உலகிற்கு புதிய மற்றும் நம்பகமான இடங்கள் தேவையாக உள்ளது. அதற்காக இந்தியா தன்னை தயார்படுத்திக் கொள்கிறது. செமிகண்டக்டர் உற்பத்திக்கு விருப்பமான இடமாக மாறுவதற்கு இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும். இதற்கான அடிப்படை அடித்தளம் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டது.

விநியோகச் சங்கிலி

விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது. பல சீர்திருத்தங்களையும் செயல்படுத்தியுள்ளது. எனவே உபகரண உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வாய்ப்பு களைத் தவறவிட வேண் டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். செமிகண்டக்டர் துறைக்காக 1 லட்சம் பொறியியல் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் இலக்கை எங்கள் அரசு நிர்ண யித்துள்ளது. இதில் ஏற்கனவே 70 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோ ருக்குப் பயிற்சி அளிக்கப்பட் டுள்ளது. இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் அனைவரும் முன்வந்து, இங்கு மேம்பட்ட தொழில் நுட்பத்தை உரு வாக்கும் பணியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com