டெல்லியில் கடுமையான பனிமூட்டம்: 450 விமானங்களின் சேவை பாதிப்பு

டெல்லியில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 450 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
டெல்லியில் கடுமையான பனிமூட்டம்: 450 விமானங்களின் சேவை பாதிப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. காலை 5.30 மணிக்கு தொடங்கி 10.20 மணிவரை பனிமூட்டம் நீடித்தது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், விமானத்தை இயக்க போதுமான வெளிச்சம் இல்லை. ஓடுதளமே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு காணப்பட்டது.

இதனால், விமானங்கள் புறப்படுவதும், தரை இறங்குவதும் நிறுத்தப்பட்டது. சில விமானங்கள், வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்தவகையில், சுமார் 450 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. காலை 10.20 மணிக்கு பிறகு நிலைமை சீரடைந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com