விமான நிலைய நிறுவனத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை? மேலாளர் மீது வழக்குப்பதிவு

டாட்டுவை காண்பிக்கும்படி அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
பாலியல் தொல்லை
Published on: 

தேவனஹள்ளி,

விமான நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சர்வதேச விமான நிலையம்

பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் செயல்படும் ஒரு நிறுவனத்தில் ஊழியராக 26 வயது பெண் பணியாற்றி வருகிறார்.

அந்த நிறுவனத்தில் மேலாளராக நெல்சன் வேலை செய்து வருகிறார். கடந்த மே மாதம் தான் அப்பெண் வேலைக்கு சேர்ந்திருந்தார். அந்த பெண் தனது உடலில் டாட்டு வரைந்திருந்தார். இதுபற்றி அறிந்த நெல்சன், அந்த டாட்டுவை காண்பிக்கும்படி அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

அதே நேரத்தில் நிறுவனத்தில உள்ள தனது அறைக்கு அப்பெண்ணை வரவழைத்து நெல்சன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் நிர்வாணமாக நிற்கும்படி கூறி தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது.

போலீஸ் நிலையம்

இதுபற்றி விமான நிலைய போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் நெல்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com