

புதுடெல்லி
மத்திய அறிவித்த வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் டெல்லியை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியை தொடங்கினர். அரியானா எல்லையில் டெல்லி நோக்கி அணிவகுத்துச் செல்ல விவசாயிகள் திரண்டுள்ளனர். ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் சேர்ந்த விவசாயிகள் தேசிய தலைநகரை இணைக்கும் ஐந்து வழி நெடுஞ்சாலைகள் வழியாக டெல்லியை அடைவார்கள்.
ஆனால் அவர்களை அரியானா காவல்துறை தடுப்புகளை அமைத்து தடுத்து உள்ளது. இருந்தாலும் போராட்டக்காரர்கள் தடுப்புகளை தாண்டி பேரணியில் கலந்து கொள்ள திரண்டு உள்ளனர். . காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பஞ்சாபுடனான எல்லையை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அரியானா அரசு மூடியுள்ளது.டெல்லி எல்லையில் விவசாயிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பெரிய மோதல் நடந்து வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கலைக்க மற்றும் டெல்லிக்கு செல்வதைத் தடுக்க அரியானா போலீசார் நேற்று இரண்டு முறையா தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். நிலைமையைக் கண்காணிக்க போலீசார் ஆள் இல்லா விமானங்களை பயன்படுத்து கின்றனர்.அம்பாலாவில், விவசாயிகள் போலீசார் தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
போராட்டக்காரர்களின் கூட்டத்தை கலைக்க அரியானா அதிகாரிகள் மாநிலத்தின் பல பகுதிகளில் சிஆர்பிசியின் பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர்.
விவசாயிகள் டெல்லியில் குவிந்து வருவதால் டெல்லியில் அண்டை நகரங்களுக்கான மெட்ரோ சேவைகள் மதியம் 2 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.