

கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அப்போது முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. அவர்கள் 2 பேரிடமும் ஒரு வாரம் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் மேலிடம் நீண்ட இழுபறிக்கு பிறகு சித்த ராமையாவுக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியது.
அப்போது, சித்தராமையா 2½ ஆண்டுகளை நிறைவு செய்த பிறகு முதல்-மந்திரி பதவியை டி.கே.சிவக்குமாருக்கு வழங்க முன்வர வேண்டும் என்று கட்சி மேலிடம் ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது எழுத்து பூர்வ மாக போடப்படவில்லை. 2½ ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி தலைமையை விட்டுக் கொடுப்பதாக சித்தராமையா சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. சித்தராமையா முதல்-மந்தி ரியாக பதவி ஏற்று கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதத்துடன் 2½ ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையடுத்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று திடீ ரென போர்க்கொடி தூக்கினார்.
இதனால் கர்நாடக அரசிய லில் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாக 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் குரல் கொடுத்தனர். இதன் காரணமாக கட்சிக்கும், ஆட்சிக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. சித் தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த விவகாரத் தில் தலையிட்ட காங்கிரஸ் மேலிடம், கட்சி தீர்மானிக்கும் வரை பொறுமை காக்கும்படி டி.கே.சிவக்குமாருக்கு உத்தர விட்டது.
இதையடுத்து அவர் தனது முடிவை தற்காலிகமாக கைவிட்டு அமைதி நிலைக்கு திரும்பினார். இந்த நிலையில் 26-ந் தேதி(நேற்று) டெல்லி வரும்படி நேற்று காங்கிரஸ் மேலிடம் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்தது. இதை ஏற்று அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றனர். அதைத்தொடர்ந்து நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் காந்தியை முதல்-மந்திரி சித்தராமையா சந்தித்து பேசினார்.
இந்த ஆலோசனையின் போது, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தப்படி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டு கொண்டதாக தெரிகிறது. இதனை ஏற்று முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே முதல்-மந்திரி சித்தராமையா, தனது ஆதரவு மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லியில் உள்ள மந்திரி கே.ஜே.ஜார்ஜின் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத் தினார். அப்போது மந்திரி கே.ஜே.ஜார்ஜ் உள்பட பலரும் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர் தான் ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்ப தாக கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சித்தராமையா மாநிலங்களவை எம்.பி.யாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.