டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது

சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது
Published on

டெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதியில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

6 பேர் கைது

தகவலின் அடிப்படையில் டெல்லி போலீசார் அப்பகுதியில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் அப்பகுதியில் தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 6 பேரில் 5 பேர் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் ஐவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

6 பேரும் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com