ஆந்திராவில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 பேர் பலி


ஆந்திராவில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 பேர் பலி
x

விபத்தில் உயிரிழந்தவர்கள் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ஐதராபாத்,

ஆந்திராவின் அனக்காப்பள்ளி மாவட்டத்தின் கைலாசப்பட்டினம் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துச்சிதறின.

இச்சம்பவத்தில் பெண் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 32 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பட்டாசு ஆலை செயல்பட அனுமதி பெறப்பட்டு உள்ளதா என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஆணையிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story