கட்டு விரியன் பாம்பை பிடித்து தனது குழந்தைகளுக்கு காட்டிய பாம்புபிடி வீரர்: அடுத்து நடந்த சோகம்

பாம்பை வீட்டிற்கு எடுத்துச் சென்றதுடன், அதனை தனது குழந்தைகளுக்குக் காட்டியுள்ளார்.
கட்டு விரியன் பாம்பை பிடித்து தனது குழந்தைகளுக்கு காட்டிய பாம்புபிடி வீரர்: அடுத்து நடந்த சோகம்
Published on: 

போபால்,

மத்தியப்பிரதேசமாநிலத் தில் கட்டுவிரியன் பாம்பு கடித்ததில், பிரபல பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயில் ழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

மத்தியப்பிரதேசமாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாம்புபிடி வீரர் பிரவேஷ் (40. இந்த நிலையில் பியால்ரா நகரில் உள்ள சுதாலியாரோடு பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு விஷமிக்க கட்டுவிரியன் பாம்பு புகுந்துள்ளது. தகவல் அறிந்து, அங்கு சென்றவர் அந்தப் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்துள்ளார். அதன் பின்னர், தான் பிடித்த பாம்பை வீட்டிற்கு எடுத்துச் சென்ற பிரவேஷ், அதனை தனது குழந்தைகளுக்குக் காட்டியுள்ளார். அப்போது திடீரென அந்தப் பாம்பு அவரைக் கடித்தது.

வழக்கமாக அதைக் கண்டுகொள்ளாத பிரவேஷ், உடனடியாக மருத்துவமனைக்குச்சென்று சிகிச்சை பெறவில்லை. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு அவருக்குக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக குடும்பத்தினர் அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப் பட்டு, மேல்சிகிச்சைக்காகப் போபால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த பிரவேஷிற்கு கடந்த 10 ஆண்டுகளாகப் பாம்புகளைப் பிடிக்கும் அனுபவம் உள்ளதுடன், இதுவரை பல ஆபத்தான பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் சேர்த்துள்ளார். இந்தநிலையில் அவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com