

புதுடெல்லி,
கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் முயற்சியாக உலகம் முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் இந்த தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரையில் 82 கோடியே 57 லட்சத்து 88 ஆயிரத்து 115 தடுப்பூசிகள் மத்திய அரசால் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வினியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மேலும் 94 லட்சத்து 37 ஆயிரத்து 525 தடுப்பூசிகளை வினியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.