எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் பலி, 3 பேர் படுகாயம்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் பலி, 3 பேர் படுகாயம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர்ன் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தியது.

சுந்தெர்பெனி செக்டாரில் நடத்தப்பட்ட அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய தரப்பில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com