எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் பலி

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் பலியானார்.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் பலி
Published on

ஜம்மு,

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கின்ற போதிலும், பாகிஸ்தான் அவ்வப்போது எல்லையில் அத்துமீறலை தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில், ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. மோட்டார்கள் ரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை பாகிஸ்தான் 110 முறை எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com