சோனியா காந்தி புத்தகம் வெளியீட்டு விழா; முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பு

காங். மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார் முதல்-அமைச்சர் விஜய்.
ராகுல் காந்திக்கு அருகில் முதல்-அமைச்சர் விஜய்
Published on: 

புதுடெல்லி,

சோனியாவின் நூல் வெளியீட்டு விழாவில் முதல் வரிசையில் ராகுலுக்கு அடுத்ததாக முதல்-அமைச்சர் விஜய்க்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தி எழுதியுள்ள ”Belonging: A Journey of Love” என்ற சுயசரிதை நூலின் வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள ஐடிசி மௌரியா நட்சத்திர விடுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நூலில் ராஜீவ் காந்தியுடனான காதல், திருமணம், இந்திரா காந்தி குடும்பத்தில் ஏற்பட்ட மோதல்கள், ராஜீவ் காந்தி படுகொலை, பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது உள்ளிட்ட தனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை சோனியா காந்தி விவரித்துள்ளார்.

இந்த சுயசரிதை வெளியீட்டு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி விடுத்த அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் விஜய் டெல்லி சென்று பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, கர்நாடகா முதல்-மந்திரி டிகே சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

டெல்லியில் நடைபெறும் சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவில் முதல் வரிசையில் ராகுல் காந்திக்கு அருகில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளார். முன்னதாக, டெல்லியில் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் விஜய்யை பிரியங்கா காந்தி வரவேற்றார்.

X