சோனியா, ராகுலுடன் சர்வதேச அமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு


சோனியா, ராகுலுடன் சர்வதேச அமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு
x

சோனியா வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைக்கும் மற்றும் சர்வதேச பிரச்சினைகளை விவாதித்து முடிவெடுக்கும் 'முற்போக்கு சர்வதேசம்' என்ற அமைப்பின் பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த குழுவினர் நேற்று காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினர். சோனியா வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பின்னர் பல்வேறு துணை அமைப்புகளை இணைத்துக்கொண்டு உலக அளவில் வீரியமாக செயல்பட்டு வருவதாக பிரதிநிதிகள் கூறினர். அதன் பின்னர், அனைத்து மக்கள் வசிக்கும் கண்டங்களிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100 க்கும் மேற்பட்ட அமைப்புகளை உள்ளடக்கியதாக குழுவின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது.

1 More update

Next Story