சபாநாயகருக்கு என் பெயரை ஒழுங்காக கூற கூட தெரியாது: கார்த்தி சிதம்பரம் எம்.பி. நகைச்சுவை

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சபாநாயகருக்கு என் பெயரை ஒழுங்காக கூற கூட தெரியாது:  கார்த்தி சிதம்பரம் எம்.பி. நகைச்சுவை
Published on

புதுடெல்லி

சபாநாயகருக்கு என் பெயரை ஒழுங்காக கூற தெரியாது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. என்று நகைச்சுவையாக கூறினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 13-ந்தேதி வரை நடந்தது. பின்னர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் டெல்லி மாணவர் போராட்டத்தின்போது நடந்த தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. எனினும், சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் வளர்ச்சி சட்ட திருத்த மசோதா, கேரள (பெயர் மாற்றம்) மசோதா, 2016, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக (திருத்த) மசோதா, 2026 உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேறின.

7 ஆண்டுகள்

இதில், இந்த மசோதா நிறைவேறிய விதம் விவாதத்திற்குரிய ஒன்றாக உள்ளது. ஏனெனில், உறுப்பினர்களின் எந்தவித விவாதமும் இன்றி இந்த மசோதாக்கள் நிறைவேறி உள்ளன. எப்.சி.ஆர்.ஏ. மசோதா இரு அவைகளின் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சூழலில், மக்களவை எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் தொகுதி மறுவரையறை பற்றி பேசும்போது, 543 பேர் உள்ள நாடாளுமன்றத்தில் 7 ஆண்டுகளாக எம்.பி.யாக இருக்கிறேன். ஆனால், சபாநாயகருக்கு என்னுடைய பெயரே தெரியாது. அவர், கார்த்தி என்ற பெயருக்கு பதிலாக கீர்த்தி என்றுதான் அழைத்து வருகிறார் என்று நகைச்சுவையாக கூறினார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற பலத்த குற்றச்சாட்டு கூறப்படுகிறது. 543 என்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையே தொடர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com