மைசூருவில் இருந்து பீகாருக்கு நாளை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு

மைசூருவில் இருந்து பீகார் மாநிலம் தனபூருக்கு நாளை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மைசூருவில் இருந்து பீகாருக்கு நாளை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மைசூருவில் இருந்து பீகார் மாநிலம் தனபூருக்கு 9-ந் தேதி(நாளை) ஒரு மார்க்கமாக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்(06218) இயங்குகிறது. மைசூருவில் இருந்து 9-ந் தேதி காலை 11 மணிக்கு புறப்படும் ரெயில், 11-ந் தேதி இரவு 8.45 மணிக்கு தனபூரை சென்றடைகிறது. இந்த ரெயில் கே.எஸ்.ஆர்.பெங்களூரு, யஷ்வந்தபுரம், துமகூரு, அரிசிகெரே, பீருர், சிக்ஜாஜூர், தாவணகெரே, கொட்டூரு, ஒசப்பேட்டே, தோரணகல்லு, பல்லாரி, குண்டகல், துரோணசெல்லம், நந்தயால், நரசரோபேட், குண்டூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், குர்தா ரோடு, பத்ராக், ஆத்ரா, அசன்சோல், மதுபூர், ஜக்ஜா, கியூல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com