இந்தியாவிற்கு வரும் எரிபொருள் கப்பல்களுக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு

ஹார்முஸ் ஜலசந்தி அருகே 5-க்கும் மேற்பட்ட அதிநவீன போர்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவிற்கு வரும் எரிபொருள் கப்பல்களுக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு
Published on

புதுடெல்லி,

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து கடந்த பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. அதற்கு பதில் தாக்குதலாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இவ்வாறாக போர் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், போரின் ஒரு வியூகமாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப்போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. மேலும், 28 இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் சிக்கின.

இதனால் இந்தியாவில் மக்களிடையே எரிபொருள் தட்டுப்பாடு குறித்த பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனவே, மத்திய அரசு ஈரானுடன் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. அதன் பிறகு ஒவ்வொரு கப்பலாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றது.

இந்தநிலையில், மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவிற்கு வரும் சரக்குக் கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்து வர ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’ என்ற திட்டத்தை தொடங்கியது இந்திய கடற்படை.இதற்காக ஹார்முஸ் ஜலசந்தி அருகே 5-க்கும் மேற்பட்ட அதிநவீன போர்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com