நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

மசோதா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் பிரதமரும், அமித்ஷாவும் உள்ளனர்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
Published on: 

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி தொகுதி மறுவரைய றைக்கான அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

சிறப்பு கூட்டத்தொடர்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந்தேதியன்று தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இது ஜனாதிபதியால் முறையாக முடித்து வைக்கப்படாமல் இருந்ததால் எதிர்க்கட்சிகளுக்கு ஒருவித சந்தேகத்தை கிளப்பியது.

கடந்த ஏப்ரல் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி தொகுதி மறுவரையறைக் கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதுபோல இதிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என பேசி வந்தனர். அப்படி இருந்தாலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அதனை தெரிவிக்க வேண்டும் என 'இந்தியா' கூட்டணி கட்சி யினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்தபடியே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 30-ந்தேதி (அதாவது இன்று) தொடங்கும் என கடந்த 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ இதனை அறிவித்தார். டிசம்பர் 3-ந் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறலாம் என அவர் குறிப்பிட்டார்.

மக்களவை இன்று கூடுகிறது

இதன்படி பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மக்களவை கூடுகிறது. டிசம்பர் 2-ந்தேதி மாநிலங்களவை கூட் டம் தொடங்குகிறது. எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்தபடியே அதே தொகுதி மறுவரையறைக்கான அரசியலமைப்பு திருத் தம் உள்ளிட்ட மசோதாக்கள் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் அசாம் மாநிலத்தில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட நாகோன் தொகுதி எம்.பி. தேவாசிஷ் சர்மா (பா.ஜனதா) பதவிப்பிரமாண கையெழுத்திட்டு இருக்கையில் அமர வைக்கப்படுகிறார். இத னைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அறிக் கைகள் சமர்ப்பிப்பும், நிலைக்குழு அறிக்கை தாக்கலும் நடக்கிறது.

மசோதாக்கள் அறிமுகம்

பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை திரும்பப் பெற மந்திரிகள் முன்மொழிவார்கள். இதனைத்தொடர்ந்து அரசியலமைப்பு (132-வது திருத்தம்) மசோதா-2026, யூனி யன் பிரதேசங்களின் சட்டங்கள் (திருத்தம்) 2-வது மசோதா-2026, தொகுதி மறுவரையறை (2-வது) மசோதா-2026 ஆகிய 3 புதிய மசோதாக்களை உள்துறை மந்திரி அமித்ஷா, சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மெக்வால் ஆகியோர் அறி முகம் செய்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து அவற்றின் மீதான விவாதத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா நேரம் ஒதுக்குவார். பின்னர் விவாதங் கள் நடைபெறும். விவாதங்கள் முடிந்த பின்னர் அவற்றை நிறைவேற்றுவதற்கான தீர்மானங்களை மந்திரிகள் முன் மொழிவார்கள்.

இதுபோல மாநிலங்களவையில் டிசம்பர் 2-ந் தேதி மசோதாக்கள் தாக்கல் ஆகின்றன.

3-ல் இருபங்கு பெரும்பான்மை

நாடாளுமன்றத்தில் சாதாரண மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படும். ஆனால் இதுபோன்ற அரசியல மைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை. இந்த பெரும்பான்மை இல்லா மல்தான் கடந்த முறை மசோதாக்கள் தோல்வி அடைந்தன.

அவை தோல்வி அடைந்து 7 மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் அவற்றை திருத்தம் செய்து மத்திய அரசு தாக்கல் செய்கிறது. ஆனால் இந்த முறை மசோதாக்கள் வெற்றி பெறும் என்ற அசாத்திய துணிச்சலுடன் ஆளும் தேசிய ஜன நாயக கூட்டணி அரசு உள்ளது. அப்போது இருந்த அரசியல் சூழ்நிலைகள் வெகுவாக மாறியுள்ளன. பல எம்.பி.க்கள் பா.ஜனதா வசம் வந்து உள்ளனர்.

ஆதரவு பலம் 320

தற்போதைய நிலவரப்படி நாடாளுமன்ற மக்களவையில் 543-க்கு 540 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 3-ல் இரு பங்கு பெரும்பான்மை 360 ஆகும். பா.ஜனதாவுக்கு 241 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள், சிவசேனாவில் இருந்து விலகியவர்கள் உள்ளிட்டவர்களை அடக்கி கூட்டணி பலம் 320 ஆக உள்ளது.

இந்தநிலையில் தி.மு.க. ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது. தி.மு.க.வுக்கு 22 எம்.பி.க்கள் உள்ளனர். அதுபோல தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவிக்கும் நிலை உள்ளது. அந்த கட்சிக்கு 8 எம்.பி.க்கள் உள்ளனர். இவற்றை சேர்த்தால் மசோதாவுக்கு ஆதரவாக 350 வருகிறது.

இதுதவிர ஒற்றை மற்றும் இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட சில கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும் என தெரி கிறது. இதனால் மசோதா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் பிரதமரும், அமித்ஷாவும் உள்ளனர்.

X