தற்கொலைக்கு தூண்டியதாக வாழ்க்கை துணையை குற்றம்சாட்ட முடியாது-ஐகோர்ட் கருத்து

இல்லற வாழ்க்கையில் முரண்பாடுகள் வழக்கமானவை. அதற்காக கணவன் அல்லது மனைவி தற்கொலை செய்தால் அதற்கு அவரின் வாழ்க்கைத் துணைதான் காரணம் என கூற முடியாது என்று மும்பை ஐகோர்ட் கூறியுள்ளது.

தற்கொலைக்கு தூண்டியதாக வாழ்க்கை துணையை குற்றம்சாட்ட முடியாது-ஐகோர்ட்  கருத்து
Published on

அமராவதியை சேர்ந்த 49 வயது ஆசிரியை ஒருவரின் கணவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கணவர் குடும்பத்தினர் ஆசிரியை மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில், ஆசிரியை தனது கணவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அடித்ததாகவும் கூறியிருந்தனர். மேலும் ஆசிரியைக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்ததாகவும், அவர் பல நாட்கள் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை மீது அமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆசிரியை மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தாக்கி துன்புறுத்தி வந்ததாக கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, “இல்லற வாழ்க்கையில் முரண்பாடுகள் வழக்கமானவை. அதற்காக கணவன் அல்லது மனைவி தற்கொலை செய்தால் அதற்கு அவரின் வாழ்க்கைத் துணைதான் காரணம் என கூற முடியாது. இந்த வழக்கில் கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் தவறாக நடத்தி உள்ளனர். தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். பெண்ணால் அவரது கணவர் விரக்தியில் இருந்திருக்கலாம். இதுபோன்ற முரண்பாடுகள் திருமண வாழ்வில் வழக்கமானவை. எனவே பெண் தான் அவரது கணவரின் தற்கொலைக்கு காரணம் என கூற முடியாது.

மேலும், அவரது தற்கொலைக் கடிதத்திலும் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கணவன் அல்லது மனைவி கோபத்தில் பேசிய வார்த்தைகள் தற்கொலைக்கு தூண்டிய குற்றமாக கருத முடியாது” எனக் கூறியது. மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com