

அய்ஸ்வால்,
மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. லால் தன்ஹாவ்லா முதல்-மந்திரியாக இருக்கிறார். அம்மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்த நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி.சசாங்கை உடனடியாக நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி கடிதம் எழுதி உள்ளார். அதில், சசாங்க் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டதாகவும், சுமுகமாக தேர்தல் நடைபெற அவரை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய நியமனம் செய்ய முடியாவிட்டாலும், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் சசாங்க் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சபாநாயகருமான ஹிப்பி இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகினார். அதனை தொடர்ந்து அவர் உடனடியாக பா.ஜ.க.வில் இணைந்தார். தன்னை முதல்-மந்திரி மனவேதனை அடைய செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.