

மும்பை,
மராட்டிய மாநிலம் அமராவதி பகுதியில் அமைந்துள்ள கட்ஜ் பாபா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காணொலி காட்சி வாயிலாக நேற்று கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர், நடப்பு 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது. அதைத் திறம்படப் பயன்படுத்தி மக்களிடையே சமூக-பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதில் மாணவாகளுக்கும் இளைஞாகளுக்கும் முக்கியப் பங்குள்ளது. புதிய கண்டுபிடிப்புகள், புதிய சிந்தனைகளின் வாயிலாக மக்களின் வாழ்வில் மாணவாகள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் புதிய கண்டுபிடிப்புகள் கிராம மக்களுக்கும் பலன் தருவதை இளைஞாகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் பிரச்னைகளுக்குத் தீவு காணும் வகையிலான ஆராய்ச்சிகளை பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.