கடந்த ஆண்டை விட சர்க்கரை உற்பத்தி இருமடங்கு அதிகரிப்பு!

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 311 ஆலைகளில் மட்டுமே அரவைப் பணிகள் நடைபெற்றன.
சர்க்கரை
Published on: 

புதுடெல்லி,

நடப்பு 2026-27-ம் ஆண்டு சர்க்கரை அரவை பருவத்தில், நவம்பர் 15-ந் தேதி நிலவரப்படி சர்க்கரை உற்பத்தி இருமடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கமான ‘இஸ்மா’ தெரிவித்துள்ளது.

உற்பத்தி அதிகரிப்பு

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 11.49 லட்சம் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி, நடப்பாண்டில் 23.59 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கரும்பு அரவைப் பணிகள் முன்கூட்டியே தொடங்கியதே இந்த உற்பத்தி அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அரவைப் பணிகள்

நடப்பு சர்க்கரை அரவை பருவத்தில் நாடு முழுவதும் 313 சர்க்கரை ஆலைகளில் அரவைப் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 311 ஆலைகளில் மட்டுமே அரவைப் பணிகள் நடைபெற்றன.

X