டெல்லியில் வாகன மாசை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காற்று மாசு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
டெல்லியில் வாகன மாசை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on: 

புதுடெல்லி,

டெல்லி உள்ளிட்ட தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசை கட்டுப்படுத்துவது பற்றிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அந்த மனு மீது தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:-

டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரிப் பது கணிசமாக குறைந்து இருப்பதை தரவுகள் காட்டுகின்றன. இது பாராட்டத்தக்கது. அதே சமயத்தில், வாகனங்கள் வெளியிடும் மாசு அதிகரித்து வருவதால், அதில் அவசர தலையீடு தேவைப்படுகிறது.

வாகன மாசை கட்டுப்படுத்த என்னென்ன குறுகிய கால, நீண்ட கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு உள்ளன என்று டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநில அரசுகளும், டெல்லி மாநகராட்சி, டெல்லி போலீஸ் ஆகியவையும் விரிவான பதில் அளிக்க வேண்டும். மேலும், பழைய, அதிக வயதான வாகனங்கள் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் நுழைவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

X