இருப்பிட சான்றாக ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஆதார் பயன்பாட்டை அடையாள சரிபார்ப்புக்கு மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இருப்பிட சான்றாக ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
Published on

புதுடெல்லி,

ஆதார் அட்டையை குடியுரிமை மற்றும் இருப்பிட சான்றாக தவறாக பயன்படுத்துவதை எதிர்த்தும், அதை அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்த வழிகாட்டுதல் வெளியிடக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மூத்த வக்கீல் அஸ்வினி குமார் உபத்யாய் தாக்கல் செய்துள்ள அந்த பொதுநல மனுவில், ஆதார் அட்டையை வெறும் அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்தவும், குடியுரிமை, முகவரி மற்றும் பிறப்பு சான்றாக பயன்படுத்த தடை விதிக்கப்படுவதை மத்திய-மாநில அரசுகள், தேர்தல் கமிஷன் உறுதிப்படுத்தவும் வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இந்த பொதுநல மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இதை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி மோகனா அமர்வு விசாரிக்க உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com