சுஷாந்த் சிங் மரண வழக்கு; சினிமா பிரபலங்களின் மேலாளர் உள்பட 3 பேர் கைது

போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு சுஷாந்த் சிங் மரணத்தில், போதை பொருள் தொடர்பான வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சுஷாந்த் சிங் மரண வழக்கு; சினிமா பிரபலங்களின் மேலாளர் உள்பட 3 பேர் கைது
Published on

மும்பை,

சினிமா பிரபலங்களுக்கான மேலாளர் ரகிலா, இங்கிலாந்தை சேர்ந்த கரன் சஞ்னானி ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து இருந்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு சுஷாந்த் சிங் மரணத்தில், போதை பொருள் தொடர்பான வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக போதை பொருள் கும்பலை சேர்ந்த கரம்ஜீத் சிங் ஆனந்தின் சகோதரர் ஜக்தாப் சிங் ஆனந்தையும் கைது செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com