கெஜ்ரிவால் உதவியாளர் என்னை தாக்கினார் - ஆம் ஆத்மி பெண் எம்.பி. பரபரப்பு புகார்

ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெஜ்ரிவால் உதவியாளர் என்னை தாக்கினார் - ஆம் ஆத்மி பெண் எம்.பி. பரபரப்பு புகார்
Published on

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் சுவாதி மலிவால். இவர் தற்போது டெல்லி மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து தன்னை பிபவ் தாக்கியதாக சுவாதி இன்று காலை 10 மணியளவில் டெல்லி போலீசிடம் போன் செய்து முறையிட்டுள்ளார். இதையடுத்து, கெஜ்ரிவாலின் வீட்டிற்கு விரைந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் பிபவ் குமார், சட்டத்துக்கு புறம்பான வகையில் கெஜ்ரிவாலின் பி.ஏ.வாக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியிருந்தது. அதுமட்டுமின்றி, கடந்த 2007ம் ஆண்டு அரசு அதிகாரியை வேலை செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாகவும் பிபவ் குமார் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த சம்பவம் தற்போது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com