தமிழ் என் பெயரில் மட்டுமல்ல.. என் உயிரிலும் உள்ளது - தமிழிசை சௌந்தர‌ராஜன்

தமிழ் தன் பெயரில் மட்டுமல்ல, தன் உயிரிலும் உள்ளதாக தமிழிசை சௌந்தர‌ராஜன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், அம்மாநில அரசுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தநிலையில், ஆளுநர் பதவியில் இருந்து நேற்று திடீரென நீக்கப்பட்டார்.

முன்னதாக ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்யவே அங்கு நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமியை உத்தரவிட வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.

இந்த சூழலில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அந்த பதவியில் நீக்கப்பட்டத்தை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று அதற்கான உத்தரவு அவரிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட போது அங்கு போய் தெலுங்கு கற்றுக்கொண்டேன். இப்போது புதுச்சேரியில் மொழி பிரச்சினை இல்லை. தமிழ் எனது மொழி. தமிழ் என் பெயரில் மட்டுமல்ல, என் உயிரிலும் உள்ளது. புதுச்சேரி பாரதி வாழ்ந்த மண் இங்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவேன் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com