தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றபோது பஸ் கவிழ்ந்து விபத்து - 5 பேர் படுகாயம்

சுற்றுலா பஸ்சில் பயணம் செய்தவர்கள் அனைவரும் விருதுநகரை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றபோது பஸ் கவிழ்ந்து விபத்து - 5 பேர் படுகாயம்
Published on: 

திருவனந்தபுரம்,

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றபோது பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

பஸ் விபத்து

தமிழகத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் சொகுசு பஸ்சில் இன்று கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். கேரளாவின் கொல்லம் மாவட்டம் கும்பவருட்டி அருகே உள்ள மலைப்பாங்கான பகுதியில் இன்று காலை 9 மணியளவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

5 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

விபத்துக்குள்ளான சுற்றுலா பஸ்சில் பயணம் செய்தவர்கள் அனைவரும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

X