

மைசூரு
தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேரும் மிக அருகில் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என டி.கே. சிவக்குமார் கூறினார்.
கர்நாடகாவின் மைசூருவில் முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரிடம் தமிழர்கள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறும்போது, ஹனூர் என்கவுன்ட்டர் விவகாரத்தில் அறிக்கை எங்களுக்கு கிடைத்துள்ளது. நாங்கள் இந்த முழு வழக்கையும் சி.ஐ.டி. விசாரணைக்கு ஒப்படைத்துள்ளோம்.
அதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள விசாரணை அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வனத்துறையினர் மிக அருகில் இருந்து 3 பேரை துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதே வேளையில் 3 பேரும் என்னென்ன பொருட்களை வைத்திருந்தனர்?. அவர்கள் ஏன் வனப்பகுதிக்குள் சென்றனர்? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சி.ஐ.டி. விசாரணை முடிந்தவுடன் அனைத்தும் வெளிவரும் என கூறினார்.