

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள தேசிய போலீஸ் நினைவிடத்தில் நடை பெற்ற காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, போதைப்பொருளுக்கு எதிரான மோட்டார் சைக்கிள் பேரணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், "போதைப்பொருள் புழக்கம் நாட்டின் எதிர்கால தலைமுறையை அச்சுறுத்துவதோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாகவும், தேசவிரோத அமைப்புகளுக்கு நிதியுதவியாகவும் மாறுகிறது. 2029 டிசம்பர் 31-ந் தேதிக்குள் இந்தியாவில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்கை பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை எட்ட, நாட்டின் அனைத்து மாநில போலீசாரும் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.