

டெல்லி,
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல டேட்டா சென்டர் நிறுவனம் ஏர்டிரங்க். இந்நிறுவனம் ஆசிய-பசுபிக், மத்திய கிழக்கு நாடுகளில் டேட்டா சென்டர்களை (தரவு மையம்) அமைத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ந்து வரும் ஏஐ, கிளவுட் கம்யூட்டிங் போன்ற துறைகளுக்கு இந்த டேட்டா சென்டர்கள் மிகவும் முக்கியமானதாகும்.
இந்நிலையில், ஏர்டிரங்க் டேட்டா சென்டர் நிறுவனம் இந்தியாவில் ரூ. 3 லட்சம் கோடி முதலீடு செய்யதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏர்டிரங்க் நிறுவனத்தில் தலைவர் ராபின் ஹடா இந்தியா வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஏர்டிங்க் நிறுவனம் இந்தியாவில் ரூ. 3 லட்சம் கோடி முதலீடு செய்யவும், 5 ஜிகோவாட் திறன்கொண்ட டேட்டா சென்டரை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடியிடம் ராபின் ஹடா தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பிற்குப்பின் பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்தியாவில் 3 லட்சம் கோடி முதலீட்டில் 5 ஜிகோவாட் திறன்கொண்ட டேட்டா சென்டரை அமைக்க ஏர்டிரங்க் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் பெறப்படும் மிகப்பெரிய முதலீடாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.