தெலுங்கானா: அரசு பஸ்-லாரி மோதல்; 10 பேர் காயம்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விபத்திற்குள்ளானது என கூறப்படுகிறது.
தெலுங்கானா:  அரசு பஸ்-லாரி மோதல்; 10 பேர் காயம்
Published on

ஐதராபாத்

ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானாவின் ஐதராபாத் நகர் நோக்கி அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று 36 பயணிகளை சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் தண்டுமைலராம் பகுதியருகே இன்று வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.

Also Read
சிவக்குமாருடனான என்னுடைய பிணைப்பு பாலும், தேனும் போன்றது: சித்தராமையா
தெலுங்கானா:  அரசு பஸ்-லாரி மோதல்; 10 பேர் காயம்

இதில், பஸ்சில் இருந்த பயணிகள் 10 பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது என கூறப்படுகிறது. இந்த தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விபத்திற்குள்ளானது என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com