சோதனை முயற்சி: நவி மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானப்படை விமானம்

நவி மும்பை விமான நிலையம், ஆண்டு தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை முயற்சி: நவி மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானப்படை விமானம்
Published on

மும்பை,

நவி மும்பை சர்வதேச விமான நிலையம் 1,160 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. ரூ,16,700 கோடி மதிப்பீட்டில் விமான நிலைய திட்டம் வருகிறது. இதில் இரண்டு ஓடுபாதைகள் ஒன்றுடன் ஒன்று 1.55 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில், விமான நிலையத்தில் நிலையத்தில் ஏர்பஸ் சி 295 விமானத்தை டச் டவுன் செய்து விமானம் சோதனை முறையில் தரையிறக்கும் பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் போக்குவரத்து கேரியர் C295 விமான நிலையத்தின் தெற்கு ஓடுபாதை 26 இல் விமானம் தரையிறங்கியது என்று விமான நிலைய ஆபரேட்டர் தெரிவித்தார்.

விமானம் தரையிறங்கியதும் நீர் பீய்ச்சு அடித்து வணக்கம் செலுத்தப்பட்டது. அதானி குழுமத்தால் உருவாக்கப்பட்டு வரும் இந்த விமான நிலையம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வணிக ரீதியாக செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com