பலாப்பழம் சாப்பிடும் ஆசையில் யானை செய்த செயல்... வைரலான வீடியோ

யானை ஒன்று பலாப்பழம் சாப்பிட ஆசைப்பட்டு, அதற்காக மேற்கொண்ட செயல் வீடியோவில் வைரலாகி வருகிறது.
பலாப்பழம் சாப்பிடும் ஆசையில் யானை செய்த செயல்... வைரலான வீடியோ
Published on

கொச்சி,

கேரளா இயற்கை வளம் நிறைந்த நாட்டின் கடைக்கோடி மாநிலம் ஆகும். குளுமையான சூழலுடன், உயர்ந்த மலைத்தொடர், அடர்ந்த மரங்கள் என கடவுளின் தேசம் என்றும் மலை நாடு என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் யானைகளுக்கும் பஞ்சமில்லை.

ஆடிப்பூரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் யானைகளின் மதிப்பு உயரும். முக்கனிகளில் ஒன்றான பலா பழம் சாப்பிடுவதில் யானைகளுக்கு அலாதி ஆசை. இதற்காக, சில யானைகள் மரத்தில் இருக்கும் பலா பழங்களை பறிக்க பல முயற்சிகளை மேற்கொள்வதுண்டு. இதுபோன்றதொரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

யானை ஒன்று உயர வளர்ந்திருந்த மரத்தின் கிளையில் இருந்த பலா பழங்களை பார்த்திருக்கிறது. இதனால், மரத்தின் மீது முட்டி, மோதி பழங்களை கீழே விழ செய்யும் முதல் முயற்சியில் ஈடுபட்டது. அது பலனளிக்கவில்லை.

இதனால் வேறு வழியின்றி அடுத்த கட்ட முயற்சியில் இறங்கியது. தவறு... ஏறியது. ஆம். யானை பலா பழத்திற்காக தனது இரு முன்னங்கால்களை, மரத்தில் முட்டு கொடுத்து முன்னேறி ஒரு வழியாக கிளையில் இருந்த பலா பழங்களை துதிக்கை உதவியுடன் பறித்த பின்னரே கீழே இறங்கியது. இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com