

புதுடெல்லி,
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்காக காவிரி டெல்டா அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் சத்தியநாதன், ராமசாமி, காவிரி தனபாலன் உள்ளிட்டோர் நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது மத்திய நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா விவசாய பிரிவு தலைவர் பொன்.விஜயராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று நிதின் கட்காரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.