

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 77 ஆயிரத்து 394 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 129 பக்தர்கள் தலைமுட காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண் டியல் காணிக்கை ரூ.4 கோடியே 72 லட்சம் ஆகும்.
4 லட்சத்து 9 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 37 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட 'டைம் ஸ்லாட்" டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக் சில் 31 கம்பார்ட்மெண்ட்டுகளில் பக்தர்கள் நிரம்பி சிலாதோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.