

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில். நேற்று முன் தினம் 84,468 பேர் தரிசனம் செய்தனர். அவர்களில் 40,203 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 48 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
அன்றைய தினம் 4.22 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. எஸ்.எஸ்.டி.டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு சுமார் 15 மணி நேரம் ஆவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நீண்ட வரிசைகளிலும், காத்திருப்பு அறைகளிலும் இருக்கும் பக்தர்களுக்கு ஒவ்வொரு சில மணி நேர இடைவெளியிலும் உப்புமா, பொங்கல், சாம்பார் சாதம் ஆகியவை தடையின்றி வழங்கப்படுகின்றது.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் சுகாதாரமான குடிநீர் வரிசைகளில் இருக்கும் இடங்களுக்கே நேராக கொண்டு சென்று விநியோகிக்கப்படுகிறது.