

புதுடெல்லி,
டெல்லியில் சிஜேபி போராட்டத்தை முன்னிட்டு, அசம்பாவிதங்களை தடுக்க டெல்லி காவல்துறை முதன்முறையாக 'பிங்க் போர்ஸ்'எனப்படும் அதிரடி பெண் போலீஸ் படையை களம் இறக்கியுள்ளது.
சமீபத்தில் நடந்த போராட்டங்களின் போது, ஆண் போராட்டக்காரர்கள் சிலர் பெண் போலீசாரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், பெண் போலீஸ் அதிகாரிகளை ஆடைகளை கிழித்து மிக மோசமாக அவமதித்த சம்பவங்கள் அரங்கேறின. இந்த வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவி விலகலைக் கோரி, காக்ரோச் ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தி போராட்டத்தை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் டெல்லி காவல்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. முழுக்க முழுக்க பெண் காவலர்களை மட்டுமே கொண்ட இந்த 'பிங்க் படை', போராட்டக்களத்தில் பாதுகாப்பு பணியில் இறக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு படைக்கு என்று பிரத்யேக 'பிங்க்' நிற சீருடை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அராஜகத்தில் ஈடுபடும் நபர்களை துல்லியமாக அடையாளம் காண, பெண் போலீசார் அனைவருக்கும் அதிநவீன உடல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெண் போலீசாரிடம் வம்புக்கு வருபவர்களை இனி இந்த கேமராக்கள் மூலம் கிழிக்கப்படும் என டெல்லி போலீசார் எச்சரித்துள்ளனர்.