ரூ.1 லட்சம் கேட்டு அடம் பிடித்த சாமியார்கள்...பயந்து போன பெண் செய்த காரியம்

வீட்டிற்கு வந்த மணியின் மருமகனிடமும் ரூபாய் ஆயிரத்தை சாமியார்கள் பறித்துக்கொண்டனர்.
ரூ.1 லட்சம் கேட்டு அடம் பிடித்த சாமியார்கள்...பயந்து போன பெண் செய்த காரியம்
Published on

திருப்பதி,

தெலுங்கானா மாநிலம், உய்யூர் அடுத்த ஆகனூரை சேர்ந்தவர் பிரசாத் ராவ் வயது 60. இவரது மனைவி மணி வயது 55. இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காவி உடை அணிந்த 4 சாமியார்கள் மந்திரங்களை உச்சரித்தப்படி மணி வீட்டிற்குள் நுழைந்தனர்.

வீட்டில் இருந்த மணியிடம் எங்களுக்கு ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் உள்ள பசுக்களை பராமரிக்க ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு மணி தன்னிடம் அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை. எனதெரிவித்தார். இதனை கேட்ட சாமியார்கள் பணத்தை தரவில்லை என்றால் சாபம் விட்டு நாசமாக்கி விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். இதனை கேட்டு பயந்து போன பெண் வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரத்தை சாமியார்களிடம் கொடுத்தார்.

அப்போது வீட்டிற்கு வந்த மணியின் மருமகன் வெங்கட சிவராம கிருஷ்ணாவிடமும் ரூ. 1,000 ஆயிரத்தை பறித்துக்கொண்டனர். இது குறித்து மணியும், அவரது மருமகனும் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப்பதிவு செய்து சாமியார்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com