

புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், பல்வேறு விவகாரங்களை எழுப்பி இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் விடுதி கட்டண உயர்வை முழுவதும் திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இதனால் நாடாளுமன்ற வளாக பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு பரபரப்புடன் உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மேலவை காவலர்களின் சீருடை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு அணிந்திருந்த வெள்ளை உடைக்கு பதிலாக ராணுவ வீரர்களை ஒத்த ஆலிவ் பச்சை நிறத்தில் உடையும், தலையில் தொப்பி அணிந்தபடியும் அவர்கள் உள்ளனர்.