'மொத்த நாடும் எனது வீடு தான்'... அரசு பங்களா குறித்த கேள்விக்கு ராகுல் காந்தி பதில்

ராகுல் காந்திக்கு மீண்டும் அரசு பங்களா ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'மொத்த நாடும் எனது வீடு தான்'... அரசு பங்களா குறித்த கேள்விக்கு ராகுல் காந்தி பதில்
Published on

புதுடெல்லி,

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில், எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 20 ஆண்டுகளாக ராகுல் காந்தி வசித்து வந்த டெல்லி 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டது. இதை ஏற்று ராகுல் காந்தியும் காலி செய்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து அவரது தகுதிநீக்கம் வாபஸ் பெறப்பட்டது. இதன் மூலம் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை திரும்ப பெற்றதோடு, நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளிலும் பங்கேற்றார்.

இதனிடையே ராகுல் காந்திக்கு மீண்டும் அரசு பங்களா ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் அசாம் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த ராகுல் காந்தியிடம், அரசு பங்களா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "மொத்த நாடும் எனது வீடு தான்" என்று தெரிவித்தார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com