டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த நைஜீரியர்கள் 3 பேர் கைது

3 பேரையும் நைஜீரியாவுக்கு திரும்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த நைஜீரியர்கள் 3 பேர் கைது
Published on

டெல்லி,

வங்காளதேசம், மியான்மர், ஆப்பிரிக நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இவர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஆப்பிரிகாவின் நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் விசா காலம் நிறைவடைந்தும் தலைநகர் டெல்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்தனர்.

இது தொடர்பாக வெளிநாட்டினர் பதிவு அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீசார், தவார்கா பகுதியில் தங்கி இருந்த கொஷ்னியன் மைக்கில், விக்டர், ஜிபொ அடிப்ஜா ஆகிய 3 நைஜீரியர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் நைஜீரியாவுக்கு திரும்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com