சிலிண்டர் தீப்பிடித்து தந்தை, மகன்கள் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் சிலிண்டர் தீப்பிடித்து வெடித்ததில் தந்தை, மகன்கள் உயிரிழந்தனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

லக்னோ,

உத்தரபிரதேசம் புடான் மாவட்டம் உஜானி நகர் மொகல்லா கடி தோலா பகுதியை சேர்ந்தவர் சுக்பீர் மவுரியா(வயது 35) நேற்று இரவு சுக்பீர் மவுரியாவின் மனைவி சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது சமையல் கியாஸ் தீர்ந்ததால் அதை மாற்ற சுக்பீர் மவுரியா பக்கத்து அறையில் இருந்த மற்றொரு சிலிண்டரை வெளியே எடுத்து உள்ளார்.

அப்போது திடீர் என சிலிண்டர் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் சுக்பீர் மவுரியா அவரது மகன்கள் கோபால் (வயது 8) யாஷ் (வயது 6) ஆகியோர் தீப்பிடித்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுக்பீர் மவுரியா மனைவி மற்றும் அவரது தாயார் பலத்த காயம் அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com