திருப்பதி பிரம்மோற்சவ விழா: கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருப்பதி பிரம்மோற்சவ விழா: கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா
Published on

திருமலை,

திருப்பதியில் கல்பவிருட்ச வாகன வீதி உலாவின்போது ராஜஸ்தான் கூமர் நடனம் பக்தர்களை கவர்ந்தது. கலைநிகழ்ச்சியில் 8 மாநிலங்களை சேர்ந்த 551 கலைஞர்கள் பங்கேற்றனர்.

கலைநிகழ்ச்சிகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சாமி வீதி உலாவின்போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்க ளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சாமி 4 மாட வீதிகளில் உலா வந்தபோது 8 மாநிலங்களில் இருந்து வந்திருந்த 21 குழுக்களைச் சேர்ந்த 551 கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.

ராஜஸ்தான் கூமர் நடனம்

திருப்பதி தேவஸ்தான இந்து தர்ம திட்டங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலாசார நிகழ்ச்சியில் ராஜஸ்தான் கூமர், கர்நாடகா டோலு குனிதா மற்றும் சுக்கி குனிதா, மராட்டிய மேளம் நிகழ்ச்சிகள், தெலுங்கானா பது கம்மா மற்றும் ராஸ்-கர்பா, உத்தரகாண்ட் நாட்டுப்புற கலைகள் மற்றும் ஆந்திர பிரதேச குச்சிப்புடி, செக்கா பஜனை, தப்பு, ஜலரி மற்றும் கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் ராஜஸ்தான் கூமர் நடனம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

கவுரவிப்பு

பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கலை வடிவங்களின் துடிப்பான கல வையானது வண்ணமயமான கலாசார சூழலை உருவாக்கியது, அதே நேரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்பசாமியின் தெய்வீக தரிச னம் பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. கலை நிகழ்ச்சிகள் முடி வடைந்தவுடன் தேவஸ்தான நிர்வாக அலுவலர் முத்தாடா. ரவிச்சந்திரா சிறந்த 4 கலாசார குழுக்களுக்கு சால்வைகள் அணிவித்து கவுரவித்தார்.

அப்போது பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கலாசார நிகழ்ச்சிகள் இந்தியாவின் வளமான பாரம்பரியங்களை வெளிப்படுத்தி, கொண்டாட்டங் களுக்கு ஆன்மிக மற்றும் கலாசார மகத்துவத்தை சேர்க்கின்றன என்று அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com