

புதுடெல்லி,
மகாத்மா காந்தியின் 150-ம் ஆண்டு நிறைவு விழாவை, சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, நிலுவையிலுள்ள தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.