

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளா மட்டும் அல்லாமல் வட மாநிலங்களான குஜராத், மராட்டியம், காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. அதை தொடர்ந்து தற்போது டெல்லி, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததை அடுத்து பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால்,சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், மின்னல் தாக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் மயூரி விஹாரில் 10 செ.மீ., லோதி சாலை யில் 8 செ.மீ., சப்தர்ஜங் பகுதியில் 7.26 செ.மீ. மழை பாதிவானது. ரோஹினியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரி ழந்தனர். டெல்லிக்கு அருகில் உள்ள அரியானாவின் குருகிராம் நகரிலும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயி ரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் சூழப்பட்ட உயரமான கட்டிடங்களில் சிக்கியிருந்த மக்க ளுக்கு உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் நகரின் பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளன.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வப் போது மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள் ளது.கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் சில பகுதிகளில் பெய்த திடீர் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு அவசரகால மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ராஜஸ்தானிலும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கோட்டா மாவட்டத்தில் உள்ள ராம்கஞ்ச் மண்டி பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவானது. அடுத்த 3 நாட்களில் பல மாவட்டங்களில் மேலும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச் சரித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் பெய்த கனமழையை தொடர்ந்து அலக்நந்தா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அதன் கரையில் உள்ள சிவபெருமானின் சிலை பாதி மூழ்கிய நிலையில் காணப்படுகிறது. அலக்நந்தா, மந்தாகினி ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. உத்தரகாசியில் பெய்த பலத்த மழையால் நலுபானிக்கு அருகே நிலச்ச ரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கற்கள், மண், பாறைகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன.