கொரோனாவுக்கு சிகிச்சை முலாயம்சிங் உடல்நிலையில் முன்னேற்றம்

கொரோனாவுக்கு சிகிச்சை முலாயம்சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை முலாயம்சிங் உடல்நிலையில் முன்னேற்றம்
Published on

புதுடெல்லி,

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தாக்கி வருகிறது.

இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத்தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு (வயது 80) நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு அறிகுறிகள் இல்லாத தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை அரியானாவின் குர்கானில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை தேறிவருவதாக கூறப்படுகிறது.

மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com